செவ்வாய், 3 மே, 2011

உலக பத்திரிகை சுதந்திர தினம்


பெற்றதற்க்கா? பெற போவதற்கா ?
பேசியும் பேசாமலும் கொண்டாடலாம்
இன்றைய நாளில் எதிர்வரும் நாளை

கைபேசி அடிமை


கணிணியிலும் இணைய இணைப்பு இல்லை
கைபேசியிலும் இதே தொல்லை
இறந்து விட்ட பின் என் கனவில்
இந்த அதிசயம் நடந்து தொலைக்கிறது

நட்பின் நடப்பு



பகலென்றால் ஞாயிறாகவும்
இரவென்றால் நட்சத்திரமாகவும்
நிலவினை விட்டது கூட நான்
நிலையில்லாமல் தேய்ந்து மறைவதால்
நான் கொண்ட அவள் நட்பும்
அவள் கொண்ட என் நட்பும்
நாளெல்லாம் நட்பிற்காய் இணைந்து
நடக்க போகிறதாம் பாருங்கள்


என்கனவு தோழி


இசையோடு அவளும்
என்கவியோடு நானும்
பாடலாகி பக்தியாகும்போது
பகலில் கூட தூங்கிவிடுகிறேன்
தாயைபோன்றே சிலநேரம்
தாலட்டிவிடுவதால் எனக்கு

நட்புக்கு இது சொந்தம்


பிசிராந்தையின் நட்பைபோலே 
பேஸ்புக்கிலோ* ஜி டாக்கிலோ* 
கோப்பெருஞ்சோழனுக்கு குறுங்கவிதை 
கூறிகொண்டிருப்பதை பாருங்கள் 
நம் நட்போ ஒரு பால் 
நடக்கும் நட்போ எதிர்பால் 
வரலாறு நாளை மாற்றித்தான் எழுதிகொள்ளும்போல 
வளர்ந்து கொண்டிருக்கும் இவர்கள் நட்பை பார்த்து 
வடக்கிருந்து உயிர்துறந்தது நம் நட்புபென்றும் 
வாழ்க்கைமுழுதும் உயிருடன் இருக்கும் இவர்கள் நட்புபென்றும் 


* பிறமொழிச்சொல் 

நட்பின் புரிதல்

பக்கத்தில் சென்றால் கடித்துவிடும் 
பயமில்லாமல் நட்புகொள்கிறது
பறவையும் விலங்குமாய் நட்பிற்கு 
பார்க்காமல் கிடைத்த நட்புகூட மனிதவடிவில் 
பழையவை பழித்து பழகிகொண்டிருக்கிறது இப்போது. 


திங்கள், 2 மே, 2011

கவிதை வருவது எப்படி ?

 அறுபது வயது ஆயுட்காலத்தில் 
இருபது வயது தூங்கியே 
எத்தனையோ பேர் வாழ்ந்திருந்தாலும் 
எனக்கு அதுவோ பத்து வயது 
படாத பாடு படுகின்றேனே பாருங்கள்
 படுக்கை முழுக்க புத்தகங்கள் 
இங்கர்சாலின் சிந்தனைகள் இடப்பக்கம் 
எமர்சன் கருத்து வலப்பக்கம் 
தலைமட்டிலோ ஜேம்ஸ் ஆலன்
தலையணையாக காப்மேயர்
நெஞ்சிலிருக்க தமிழ் இலக்கியம்
நேரம் கடத்த சூ. ' .பி ஞானம்
சென்னின் தத்துவம் புத்தியில் புரள
கலீல் ஜிப்ரானின் தீர்க்க தரிசி
கண்ணதாசனின்  அர்த்தமுள்ள இந்துமதம்
கால்மாட்டிலும் கணக்கற்ற புத்தகம்
கவிதைமட்டுமே கண்களுக்க் தூக்கமாய்
இத்தனையும் என்னை தாலாட்ட முடியாமல்
எந்தன் கிராமத்திற்கும் செல்லமுடியாமல்
விழித்திருக்க வேதனையாய் கணிணித்திரையும்
வேலையிருக்க நான் ஒரு சடலமாய்
படித்தது அத்தனையும் மறந்து விடுகிறேன்
படிக்க வேண்டிய வெற்றியையும் துறந்துவிடுகிறேன்
அட்டாங்க யோகம் பழகலாமேன்றால்
அடிக்கடி மாறும் பணி வேளையால்
பக்தி யோகமும் பழகமுடியவில்லை 
பாருங்கள் கர்மயோகத்தில் கண்தூங்கவில்லை 
இராஜயோகமும் தொடகூடவிலை 
இனி ஞானயோகமும் விதைக்காத முல்லை 
நகரம் எனக்கு நரகத்தை கொடுக்க 
நாட்டுபுறமும் எதிரியாய் இருக்க 
சித்தனை போன்று வாழுந்துபார்க்கலாம் 
பித்தனை போன்று துணிகூட உதறி 
ஆறறிவு என்னை அஞ்ஞானம் யாக்கி 
அதிகாலை ஆக்சிஜன் பிராணயாமம்  தாக்கி 
விடிகிறபோது தூக்கத்தின் கானலால் 
விஞ்ஞான மாற்றத்தில் ஏங்கி போகிறேன்
நிலையான தூக்கத்தில் கனவின்றி செரிப்பதால் 
நித்தம் நித்தம் கனவில்தான் தூங்கி நான் போகிறேன் 
நெற்றி பொட்டில் ஞானம் நில்லைக்கும்வரையில் 
நிலையில்லா வாழ்வினில் நான் ஒரு மாயையே  








இக்கால மனிதர்கள்

இன்குபேட்டரில்* பொரித்ததை போன்றே 
இக்கால குழந்தைகள் கோழிகுஞ்சாய் 
சிசேரியனில்* பிறக்க வைக்கப்பட்டு 
செல்லமாய் புட்டிபால் புகட்டி 
பறவையினமாய் இருந்தாலும் கோழி 
பறக்காமல் வாழ்க்கை நடத்துவதுபோல் 
மனித இனமாய் இருந்தும் 
மதியின்றி கால்நடைக்கு ஒப்பாய் 


*பிறமொழிச்சொல்