திங்கள், 31 ஜனவரி, 2011

என் காதல் (கனி) பழ மொழி


காதற்ற ஊசியும் கடைக்கண் வாரா
காதல்தான் கடைக்கண் வரை வரும்

பிப்ரவரி* 14


பதினான்கு நாட்களுக்கு பின்
பச்சை உடையோடு வருவேன்
ரோஜாக்களுக்கு* செடிகள்  எழுதியது
அவளோ ரோஜா* வாய் பூத்தால்
அடி செடியாக நான் இருப்பேன்

*பிறமொழிச்சொல்

என் மீது காதல் என் நிழல் மீது மோகமா ?


காதலியாகவே இருந்து போகிறேன்
கண்ணகியாய் மட்டும் விட்டு போகதே

நிழலோடு பேசாதே கள்வனே
நீ என்னோடு மட்டுமே பேசு

சாபமும் நெருப்பும் சந்திப்பது
திருட்டில்

பிரிவதும் புரிவதும் தொலைக்கட்டும்
இருட்டில்

அவளிடம் முதல் முத்தம்


வருடம் பிறக்கும்போது
வாய்ப்பிருந்தால் கேட்டிருப்பேன்
முப்பத்தியோரு நாளும்
முத்தமாய் கடந்திருக்கும்

சனி, 22 ஜனவரி, 2011

அவனின் கண்கள் !


தொடர்ந்து வருகிறாய் துருவி பார்க்கிறாய்
முடிந்து போகிறது
இமைகளின் இடைவெளியில்

கண்ணோடு கண் நான்கில் கணக்கிட்டேன்
கழிந்தது நாணத்தினால்
எனது மட்டும்

கனவை கூட்டும் கண்களோடு உனக்கு
மீதம் மட்டுமே
இன்றைய பார்வை

என்றாவது ஒருநாள்
திரும்பி பார்ப்பேன்
உன்னையும்
என் கண்களையும்

ஏனெனில் என்னைத்தவிர இவ்வுலகில்
மெல்லிய இதயத்தால்
இமை மூடபடுவதில்லை 

உன் இதயத்தில் இருந்தாலும் எனது தவிப்பு !


வேறு ஒருவனோடு திருமணதிற்கு
சம்மதித்து விட்டேன்
என்று இறந்து போன என்னால்
எப்படி கூறமுடியும் ?

அவனின் விழிப்பு !


உன் நினைவுகளை பூசிகொள்கிறேன்
என் அழகு கூடிகொள்கிறது
உன் பருக்களின் கேள்விக்கு
என் பார்வையின் பதில்

காதலியின் கவிதை


உன்னை கவிஞன் ஆக்கினேன் என்றா
உன் கவிதையால் என்னை காதலி ஆக்கினாய்
என் கவிதையில் எந்த புலமை இல்லை என்றாலும்
என் பெயரே உன் கவிதை ஆகும்போது
உன் உயிரே என் கவிதை ஆகாதா ? 

அன்பே வலிக்கிறது இதழோடு இதழ் !


எனக்கு பூ கொடுக்க
எத்தனை முற்கள்
அவனின் விரல் நிழல்
சுட்டிக்காட்டிய சுவடுகள் ! 

கண்ணும் பார்வையும் காதலால் !


எத்தனையோ கண்கள் என் மீது
என் பார்வையோ உன் மீது 

கா. காதலி !


எனக்கு சொல்ல தெரியவில்லை
உன் கவிதையில் என் பெயரென்றால்
உன் கவிதையில் என் தலைப்பு
உன் பெயரின் முதலெழுத்து

செவ்வாய், 11 ஜனவரி, 2011

கைபேசி உன்னை வைச்சிக்கவா?

நல்லது கொஞ்சமாய்
கெட்டது பல மிஞ்சுமாய்
கைபேசி உன்னை கொஞ்சித்தான்
காலத்தால் கிடக்கிறாயே தஞ்சமாய்

உன் காதல் தோல்வியால் என் மரண வாக்குமூலம் !

உன் பொழுது வாழ்க்கைக்காய் விடியும்போது
என் பொழுது காதலுக்காய் முடிந்து கொள்ளும் 

அலங்கா நல்லூர் மாடு அடக்குதல்

அலங்கா நல்லூர் மாடு அடக்க
அலட்டல் இல்லாமல் வந்திடுவீர்

காப்பீடு தேவையில்லை
காளைகள் கொன்றாலும்

கொம்பு சீவி கூராக்கி
கூட்டத்தையும் சீராக்கி

அம்பை போன்று புறப்பட்டு
அடக்கட்டும் ஆண்கள் மட்டும்

தெம்பை மூட்டும் மின்சாரம்
திடீரென நின்றதால்

கன்னத்தில் கைவைத்து
காப்புரிமை அவலத்தை

என்னத்தான் சொல்லுவது
எண்ணத்தை சொல்லுகின்றேன்

குழந்தைகளை குட்டிசுவராக்கும்
கொடூரமான விளையாட்டாம்

கணினியில் விளையாடும்
காளை அடக்கும் விளையாட்டாம்

உண்மையான வீரம்தான்
உயர் நீதிமன்றம் குறுக்கிட

தன்மான தமிழுக்காய்
தலை மகனாய் மென்பொருளில்

வடிவமைத்தால் பொறுக்க வில்லையாம்
வழக்கில் இருக்குது என் கணினி விளையாட்டு

காளை ஒன்று இனி வளர்த்திடுவேன்
கண்ணை மூடும் நீதியினை

குத்தி கிழிக்கும் கொம்போடு
கொடுத்திடுமாம் நீதியினை 

வேண்டுகோள் என்பது !

எனக்கு மரணமில்லை 
நெகிழி பைகள் நெஞ்சை 
நிமிர்த்தி எழுதியது இது 

நான் இறந்து கொண்டிருப்பதால் 
எனக்கும் உன் போல் வாழ ஆசை 

மண்ணோடு வளியும் 
மற்றதும் வலியால் 
வாழ்க்கை கேட்ட அவலம் 

ஆக்சிஜன் அடைக்க பட்டு 
அதன் வாய் கட்டப்பட்டு 
ஓட்டு கேட்கும் உயிர் பிச்சை 
ஓட்டையாக்கும் நெகிழி பையில் 

காற்றும் வரும் காசும் வரும் 
கையை நீட்டும் மக்கள் கூட்டம் 

கண்கள் திறந்தால் நன்றாய் இருக்கும் 
கவலை படும் எந்தன் பூமி 

கவிதை மட்டும் படித்தால் போதாது 
கண்டுக்காமல் விட்டாலும் சொல்வதை சொல்வேன் 

கடைக்கு போகும் கவிதை வாசியே 
கையில் துணி பை எடுத்து செல்லேன் 

காய்கறி பச்சையாய் வாங்கி வரலாம் 
கடனே இல்லாமல் ஓசோனை அடைக்கலாம் 

*நெகிழி பைகள்-polythene cover 


திருமணத்திற்கு முன்னும் பின்னும்

காதலிப்பவன் அல்ல
காதலிக்க படுபவன்
எனக்காக இல்லை
என் குடும்பத்திற்காக 

பெட்ரோல்* டீசல்* மற்றும் எரிபொருள்

கண்ணீர் பூமி சிந்துவதால்
கவலை இல்லாமல் வாழலாம்

வண்டியோட்டும் வர்க்கங்களே
வாரி குடிக்கிறீர் வளி செந்நீர்

சிந்தும் கண்கள்
செத்து கொண்டிருக்க

சீரழியும் எண்ணெய் கசிவு
சிரித்து கொண்டிருக்க

பூமித்தாயின் புலம்பலாய்
புழுவாய் செரிக்கும்
மண்ணின் மாந்தர்களே

மரபு எரிபொருள்
மாற்றம் காணுங்கள்

மரணிக்கும் மண்ணுக்கு
மரங்களை நடுங்கள்

தண்ணீர் ஊற்றுங்கள்
தாகம் அடங்குங்கள்

மழை நீர் பெறும்போது
மறக்க வேண்டாம்

சூரிய சக்தியை
சுவிஸ் வங்கியே சேருங்கள்

கள்ள பணம் கைவிடும்
கலி காலம் போய்விடும்

மெல்லத்தான் மாறினால்
மீண்டும் பூமியாய்

பிறந்திடுவேன் உம்மை
பிறக்க வைப்பேன்

கவிதையில் கல்லறை கட்டி
கவலையால் செத்து விழுந்த

இளையவன் இவன் சிந்தும்
எரிபொருளே பெட்ரோல் *
இன்னும் பல இது போல்

குறைவாய்தான் இருக்குது
குடிக்காதீர் சுத்தமாய்

செரிக்காமல் இருக்கிறேன்
செந்தமிழின் சடலமாய்

*பிறமொழிச்சொல் 

சனி, 8 ஜனவரி, 2011

மாட்டு பொங்கல்

எனக்கு பால் கொடுத்த பசு
என்னை ஞாபகம் வைத்து
இப்போது கோமியமாவது கொடுக்கும்
மாட்டு பொங்கல் கொண்டாட
மறக்காமல் சென்றிடுவேன் ஊருக்கு

கால் கட்டை அவிழ்த்து
காளை ஊசியும் தவிர்த்து
குட்டைக்கு இழுத்து, இன்று
குளிப்பாட்டி வைப்பனே

அங்காடி அரிசி பொங்கி உனக்கு
அம்மாவுக்கு நிகராய் படைத்தாலும்
எட்டி உதைக்காமல் என்னை
இதுவரை மறக்கவில்லை நீ

நக்கி பார்த்திடுவாயே
நகரத்து வாழ்வில் நான்
சிக்கி சிதைந்தாலும் உன்
சீம்பால் மறக்க முடியுமா ? 

எங்கேயோ இருந்து படித்து கொண்டிரு காதலி !

காத்திருக்க காத்திருக்க சொல்லிவிட்டு
கற்பனையில் கூடயிருந்து கொல்லுகின்றாய்

போய்விடுவேன் போய்விடுவேன் சொல்லிவிட்டு
புறமூச்சை உள்ளிழுத்து தள்ளுகின்றாய்

இதயமில்லை இம்சையில்லை சொல்லிவிட்டு
இரத்தத்திலே யுத்தம் ஒன்று செய்கின்றாய்

சிரிப்புமில்லை அழுகையுமில்லை சொல்லிவிட்டு
சிந்தனையில் உண்மை மட்டும் அள்ளுகின்றாய்

கொஞ்சமில்லை கூடவில்லை சொல்லிவிட்டு
கொஞ்சி கொஞ்சி முத்தம் மெல்ல எண்ணுகின்றாய்

பஞ்சணையில் தூக்கமில்லை சொல்லிவிட்டு
பார்த்ததை கூட பகல் கனவாய் விழிக்கிறாய்

அஞ்சலில்லை செய்தியில்லை சொல்லிவிட்டு
அடிகடி அடிகடி கைபேசியை திட்டுகின்றாய்

இத்தனையும் என்னை மட்டும் எழுத விட்டு
ஏனடி கவிதையாக இதை படிக்கிறாய் 

ஒரு கிராமத்தில் நாளை ?

சுற்றுலா கிராமம் சொன்னால் கேளுங்கள்
சுவை மிகுந்த வருமானம் நாளை நீங்கள் நம்புகள்
கழனி விற்று கல்வி கற்ற காலம் மாறி போச்சு
காந்தி சொன்ன கிராமம்தானே கையைகூப்பும் விளம்பரத்தில் பேச்சு

சென்னையில் இருந்து சில மைல்கல்
சீர்காழிக்கு பக்கத்தில்
கோவையில் இருந்துவர குளிர்சாதன வண்டி
குளிதலையின் முந்தைய வெற்றிலை

சேரே இல்லா இயற்கை ஏரி
சிதம்பரத்தை ஒட்டினார் போல்
ஆறுக்கும் பேருக்கும் ஐம்பது அடி
அலைக்கும் கரைக்கும் தூரமில்லாமல்

நாட்டு பனையும் நார்த்தையும்
நரியின் தோளோடு நாயும்
உலவி திரியும் ஊர்
உல்லாச சுற்றுலாவுக்கு சேர்

கிளைடர்* நிறுத்த தனிக்கட்டணம்
கிணற்று நீரை பார்பதற்கும் செலுத்தனும்
குடும்பமாய் வந்தால் கட்டண கழிவு
குதூகலமாய் வாருங்கள் நண்பர்களே

வார விடுமுறை வரலாறில் மறைந்ததால்
மாத விடுமுறையில் மனம் மகிழலாம் வாருங்கள்
வருட விடுமுறை வருவதற்குள்ளே
வாய்ப்பு காத்திருக்கிறது வாருங்கள்

முப்பாட்டன் முந்திய கிராமத்தை காண
முட்டாளாய் மாறிய பட்டணம் தவிர்த்து
நெல்லு விளையும் நேர் காணலை
நேரமிருந்தால் ஐந்து நிமிடம் கண்டு செல்லுங்கள்

இரண்டாயிரத்து ஐநூறு கலோரி
இறாலின் வேதியியல் சுவை
கொழுப்பே இல்லாமல் கோழி மாத்திரை
குடிநீர் இல்லாமல் விழுங்க வசதியும் உண்டு

வெட்டி கதைகளை விஞ்ஞான அழிவினை
கொட்டி தீர்த்திடும் குற்றால அருவியும்
மென்பொருள் கண்காணிப்பில் வீசிடும் தென்றலும்
மீறினால் தண்டம் மட்டுமே இங்கு உண்டு

செத்து போய்விட்டால் சொர்க்கமென்று இங்கு
சொத்தை கொடுத்திடுங்கள் சொல்லுகின்றோம்
பழைய கிராமத்தை உருவாக்கி உங்கள் சமாதிக்கு
பணமும் அனுப்பி வைப்போம் மாதமாதம் 


*பிறமொழிச்சொல்

வெற்றிக்கு வித்திடு

இறக்கை உடைந்த விமானம்
என்னிடம் கேட்கிறது பறக்கலாமா? 

நான் வீரனாய்

இன்னும் இறக்கவில்லை
சாகடிக்க பட்டதால் 

இப்போது

காதலிக்காமல் வாழ முடியாது
தோல்வி பெறமால் இறக்க முடியாது 

ஒரு தலை காதல்

தங்கை யாரையும் காதலிக்க கூடாது - அவன்
தான் காதலித்தாலும் சொல்லமுடியாமல் 

நான் காதலித்ததால்

கனவில் மட்டுமே தூங்கி கொள்கிறேன் 

ஆழி பேரலை ( சுனாமி )

ஆறடி போதாதென்று
அலையடி கொடுத்தது போதும்
ஆறடியில் அடக்கம் செய்ய
அத்துணை உயிர்களையும்
திருப்பிகொடு ( வாழ) 

அம்மா அல்ல புள்ள !

"அம்மா" "அம்மாவென்று"
அத்துணை முறை கத்தினேன்
திருவிழாவில் தொலைந்ததால்
தைரியமில்லாமல் ஒலிபெருக்கியில்
யாரோ யாரையோ அழைப்பதாக நினைதாயாம்
எங்கே இருக்க "புள்ள"
இறுதியாய் கத்தும்போதுதானே
என்னையே உனக்கு அடையாளம் தெரிந்து
கட்டி கொண்டாய் அல்லவா ?
பட்டிணத்தில் படித்த அம்மா கவிதையை
உனக்காக "புள்ள" வென்று புரியும்படி
சீக்கிரம் அனுப்பிவைக்கிறேன் 

நிலவும் சூரியனும் நேர்கோட்டில்

விழுந்து எழுந்தேன்
வெற்றியுமில்லை தோல்வியுமில்லை
நாளும் நானும் 

எனது உயில்

இறந்த இந்த நாளை பார்க்காதீர் !
நான் பிறந்த அந்த நாளை பாருங்கள் !
எதையும் சாதிக்க வில்லையென்றாலும்
எதையாவது சாதிப்பேன் என்று வளர்ந்துவிடுவேன் ! 

பரம்பரை சொத்து

வெற்றியை மட்டுமே கடனாய் கொடு
காலம் முழுக்க அடைக்காமல் தோல்வியோடு
இருந்து விடுகிறேன் 

ம் ம் மழலைக்கு தெரிந்தது !

என் பையன் ,
இலங்கையை எழுத்து விளையாட்டில்
கலைத்து போட்டான்,
ஆச்சர்யம் !
ஈழமாய் கலையாமல் கிடந்தது !
என்னை வந்து அடித்து விளையாடுவதால் ! 

காற்றே எச்சரிக்கை ?

எந்த புயலிலும் என்னோடு
உள்மூச்சிலும் வெளி மூச்சிலும்
உயிரோடு இருக்க பிழைத்து கொள் 

நெருப்பும் நானும் ஒன்றுதான்

வாழ்ந்து திரிகிறேன்
மறைந்து எரிகிறாய்
எரிந்து போகிறேன்
என்னோடு சாம்பலாகிறாய் 

புகை பிடித்தேன்

நுரையீரலை எரித்துவிட எத்தனையோ முறை
முயற்சிக்கின்றேன்
வாயோடு சென்று
மூக்கோடு முடிந்து போகிறது
அதனால்தானோ என்னவோ
நுரையீரல் புற்றோடு எரிந்து போகிறது
இறப்பும் என் ஆசையும்

அரிசியிடம் பேசினால் உனக்கென்னடி கோபம் !

உமியை போன்ற உந்தன் நாணம்
உடைந்த நொய்யாய் சிரிக்கும் பற்கள்
தவிட்டின் நிறம் தங்க உன் மேனி
தண்ணீரில் கலைந்த அரிசி வெள்ளை உள்ளம்

உளுந்து போலடி நானும் கருப்பாய்- காதலில்
ஊறவைத்து பார் வெளுப்பேன்

அரைக்க மட்டும் செய்யாதடி என்
ஆவி வேக வைத்தால் தாங்காதடி

இட்லி இதயம் இல்லையடி
இதனை சட்னி போல ஆக்கலாமடி

காரம் காதலுக்கு ஆகாதடி நீ
கடுகு போல வெடிக்காதடி

எண்ணெய் மட்டும் என்னை தானடி
இதை தாலிக்கு வேண்டாம் தாளிக்காதடி

என்னை தலைக்காவது தடவிகொள்ளடி

இறுதியாய் ........ 

தானத்தில் பெரியது எது?

சற்று முன் உயிரோடு இருந்தேன்
சடலமாகி போனேன் விபத்தில் இப்போது

அவசர ஊர்தியில் எடுத்து செல்ல
ஆளாளுக்கு பேரம் பேசினர்

பேரம் எதுவும் படியாமலே
பெரிய தொல்லையாய் ஈ மொய்க்க

சாவை நொந்து எழுந்து விட்டேன்
சல்லி காசுக்கும் குறையாமல்

பேரம் பேசியவன் அலறி
பேயென்று இறந்துவிட்டான்

இறந்தவன் உடலின் இதயத்தை எடுத்து
இரு சாவுக்கும் தானமாய் தந்துவிட்டு சென்றேன்

சுடுகாட்டிற்கு அல்ல சொர்க்கத்திற்கு
சொல்வதை நீங்கள் நம்புங்கள்

சட்டமும் சாப்பிட வரலாம்

அரசாங்க அரிசி கிடங்கில் தின்று 
ஆதாய யூக காய்கறியில் மண்டியில் குட்டி போட்ட 
ஏராள எலிகள் எல்லாம் 
எங்கள் மாமிச உணவில் 


மப்பா இருக்கு பட்டம் விடலாம் !

கல்வி பட்டத்தை
கடைசியாய் பறக்கவிட்டேன்
செல்லும் வானூர்தியில்
சிக்கிக்கொள்ளும் வேளையில்
மாஞ்சாவில் மாட்டிகொண்டு
மரணத்தில் தொங்காமல்
பிழைக்கும் வேலை
பிடித்தேன் நூலோடு

விமானியாக ஏக்கம்