சனி, 19 பிப்ரவரி, 2011

என்னவளே இனிக்கிறதே


அவளுடைய தலைபூவை
அதில் போட்டு வைத்திருந்தேன்
அதை திருடி போகாவந்தாய்
அப்படியா இனிப்பிருக்கு ? 

காத்திருக்கேன் காதலியே


வங்கியில் வாழ்நாள் காதலி
வருகிற நாளெல்லாம் நடப்பு கணக்காய்

சிறுக சிறுக சேமிப்பாய் கனவுகள் கூட
சிரிப்பை மட்டுமே கடனாய் கேட்பேன்

திருப்பி செலுத்துவேன் முத்தமாய் காதலி
தினம் பார்க்கும் வாய்ப்(பு)பூக்கு செலுத்தினேன் காசோலை

வைப்பு தொகையாய் வட்டி விகிதமாய்
வளர்வதும் தேய்வதும் வருத்தத்தில் உதடுகள்

பூட்டிய நகையாய் போனது இதயம்
பொருத்தமான சாவியும் திருடியே போனாள்

இணைத்த படிவத்தில் குண்டூசி சொருகி
இருக்கிறேன் இருகண்களில் அடையாள வில்லையாக

கூப்பிடுவாளோ குரல் கொடுப்பாளோ கொடுமையில்லாமல் மின்சார ஒலி கெடுப்பாளா? 

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

போய்விட்ட காதலர் தினம்

பனிரெண்டு மணி நேரம் அவளுக்காக காத்திருந்தேன்
பனிரெண்டு மணி நேரம் அவனுக்காக காத்திருந்தேன்

ஒரு நாள் முழுவதும் உங்களுக்காக காத்திருந்தேன்
ஓ காதலனே
ஓ காதலியே நீங்கள் ஏன் இன்னும் வரவில்லை
ஒரு வருடம் கழித்து உங்களுக்காக வந்திடுவேன்

காதலர்களாய் காலம் கடந்து காத்திருக்கும் அந்நாளில்
கண்டிப்பாக நீங்கள் சேர்வீர்கள் என்று போய்விட்டேன், வந்திடுங்கள்

என்னவளோடு எனக்கும் ஏமாற்றம்
எத்தனை நாள் நீடிக்கும் இந்த மாற்றம்..........?
என் காதோடு இந்நாள் கேட்டு கொண்டிருக்கும் கேள்வி .....


திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதலர் தினமும் கவிதையும்


நான் எழுதிய
எத்தனையோ கவிதை
எழுந்து வந்தது ஒன்றாய்
உயிராய்
இன்றைய தினமாக அவளுடன் 

காதலர்களாய் காதலர்தினத்தில்


ஏமாற்றம் தருவதற்கு
எத்தனையோ நாள் விடிந்திருக்க
இடம் மாற்றும் இதயத்திற்காக
இந்த நாள் வீற்றிருக்க

அவ(ன்)ள் உதடு ஆசனத்தில்
அமர்வதற்கு ஆசை ஆட்சி
அத்தனைக்கும் காதல் ஒன்றே
அருமையான இந்நாள் சாட்சி

பண்டைகாதல் அதன் பெருமை
பழகி பார்க்க புது அருமை
வந்த இன்று இரு இளமை
வாழ்க்கைக்காக ஓர் இனிமை

சேர்க்க ஒரு சிறப்பாச்சு
செயற்கையில்லா இயற்க்கையாச்சு
என்றும் அழியா காதல் இன்று
எங்களில் தோன்றும் வாழ்வாச்சு 

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

இதுவரையின் என் காதல்

அன்றைய பொழுது
ஆங்காங்கே நிறுத்தத்தில்

பேருந்து இறக்கிவிட
பெண்ணொருத்தி காணப்பட்டாள்

கால் முதல் தலைவரை
கண் முதல் என் வரை

உள்ளத்தில் மெதுவாய்
உணர்ச்சிகளால் நடந்து

தலைகுனிந்து தலையேறி
தன்னந்தனியாய் விட்டுவிட்டாள்

முகத்தோடு முழுநிலவு
முத்தமாக ஈர நினைவு

வரும் வேளை பகல் கனவு
வருத்தத்தில் என்னுதடு

முணுமுணுக்கும் பெயரென்ன
முடிவடையா பயணத்தில்

தவறிவிட்ட தலையெழுத்து
தனக்கானவள் இவளா

தூரிகையாக எண்ணமாக
துணையாக அவளாக

மற்றொரு சித்திரமாய்
மானுடத்தின் விசித்திரமாய்

வேறெங்கோ தென்படுவாள்
விதியாக மாறுபடுவாள்

அழகாக மட்டுமல்ல
அறிவோடும் அகபடுவாள்

சமயலோடும் சாதனையும்
சரிசமமாய் என்னுடனே

கணினியோடு கண்ணடிப்பாள்
காதலனாய் கைபிடிப்பேன்

புதன், 9 பிப்ரவரி, 2011

காதலர் தினம் 14


திங்களுக்கு எத்தனை நாள்
தினம் மாறும் கிழமைகள்

சந்திக்க பச்சை உடையில்
சட்டென்று வாராதா

பகல் கனவில் அவள் நினைவு
பருவத்துடனே தூங்கி கொண்டு

உருவம் ஒன்று வரைந்து வைக்க
உயிர் வருமாம் பதினான்கில்

எழுந்து விட்ட என் வேலை
எழுதி கொண்டது விடுமுறைக்கு

சுகமானால் சுகமில்லை
சுரம் வராமலும் வரமாட்டேன்

கிழக்கு கடற்கரை காதலன்


அலையோரம் கடலோடு
மணலாக உன் நினைவு

வீடு கட்டும் குழந்தைபோல
வேடிக்கையாய் காதல் அன்று

சின்ன சின்ன ஆசைபோல
சேர்ந்து கட்டிய மணல் வீடாய்

அலைவரும் நேரம் வரை
அடித்து சொன்ன சத்தியமும்

கரைந்துதான் போகிறது
கடலும் கண்ணுமாய் கரிக்கவே

கை நீட்டி உப்பு கேட்கிறது
காதலன் நான் நின்றிருந்தேன்

அலையோடு பேசிக்கொண்டேன்
ஆவலாக கேட்டு கொண்டேன்

நான் கூட உன் போலே
நம்பிக்கையை இழக்காமல்

தினம் தேடி கரை வந்தேன்
திரும்பி வருவாள் என் காதலியும்

கிழக்கு கடற்கரையும் கிறுக்கிய சிறுவனும்


சின்ன குழந்தையாய் அன்று
சேர்த்து கட்டிய மணல் வீடாய்
அலையாடும் கடலோரம்
அன்று நான் அழுதிருந்தேன்

கடலோடு கரைந்ததனால்
கவலையில் மிதந்தது மண் சுவர்
சுவரில்லா சித்திரம்
சோதனையாய் என் திறம்
கற்பனையில் தீட்டியது
கண்ணீரில் கோடிட்டது

தப்பு செய்த கடல் உனக்கு
தண்டனையை தருவதற்கு
உப்புதான் சிந்திவிட்டேன்
உலகம் என்றும் கரித்திடுவாயே


இரகசியத்தை சொல்லாதே கைபேசி !


நீயிருக்கும் தைரியத்தில்- நான்
என் வீட்டில் யாரோடும் பேசுவதில்லை
உனக்கு மட்டுமே தெரியும்- நான்
யாரோடு பேசி கொள்வேனென்று ?

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இன்பமா துன்பமா கைபேசி ?



தூக்கத்திலிருந்து எழவும்
துக்கத்திலிருந்து அழவும்
கைபேசியிலிருந்து அவ(ன்) ள் அழைப்பும்
கனவு கலைந்து விட்ட என் பிழைப்பும்
காலையிலேயே மாலை அவ(ள் ) ன்
கழுத்தில் போட்ட வேளை? 

இமைக்காமல் காதலி


ஆறடியில் வில்லு ஒன்னு
அம்படிக்க இரண்டு கண்ணு
போரடிச்சு செத்து போனேன்
புதுமை என்ன பிழைத்திருந்தேன்

வில்லும் அம்பும் வேண்டாமென்று
சொல்லும் அன்புமாய் சுத்தி வந்தாள்
சொர்க்கம் இதுதான் முத்தம் தந்தாள்

இறந்த பின்னாலும் நீ எப்படியென்றால்
இருந்தால் அன்பு கூட வருமென்றாள்

வில்லும் அம்பும் விதியே நான்தான்
சொல்ல துணிந்ததும் கூடுமே காதல்தான்

அம்பாற துணிக்கும் ஆசையுண்டு
அதனாலே இமைகூட எதிரியென்று
கன நேரம் கூட கண் சிமிட்டாமல்
காலம் முழுக்க பார்த்திருப்பேன் என்றுதான்

வில்லாக என்னுடலை விலகாத காதலால்
வீரனாய் உன் பார்வை வெடுகென்று உடைத்ததால்

உன்னோடு சொர்க்கம் வந்தேன்
உனக்கும் எனக்கும் இப்போ இமைப்பதில்லை
ஊடல் காதலென்று என்றும் கனவுமில்லை

சனி, 5 பிப்ரவரி, 2011

*பலங்கைச் சவடு


அறுபது சதவீத தேய்மானம்
ஆண்டுக்கு ஒருமுறை வாங்கப்பட்டு விற்கப்பட்டு
அப்படியே இருக்கிறது
எப்போதோ வாங்கப்பட்ட கணினி
இந்த பலங்கைச் சவடில்
ஒவ்வொரு முறையும் புதியதாக வாங்கியது போல
கள்ள பணத்தின் கணக்கை சுமந்து

* பலங்கைச் சவடு - BALANCE SHEET

கணிபொறி கவிதை


இணைய தளம் என் மதம்
எழுதும் அத்தனையும் என்னினம்
தேடும் பலவும் பாதையாக
திறக்கும் அறிவே கடவுளாகும் 

காதலில் நான் தேர்வேனா ?


காதலிக்க பயமில்லாதவன்
காதலிக்கு பயமுல்லவன் 

கைபேசியே உன்னிடம் தான் ?


கணிபொறியும் கைபேசியும் கலந்தாச்சு
கட்டணம் கூட ஒன்றாச்சு
முகம் பார்க்கும் வசதியும் உண்டாச்சு ,
ஆனால் அவ(ன்) ள்
முத்தம் மட்டும் ஏன் எச்சிலோடு இல்லை 

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

உலக கோப்பை மட்டை பந்து பிப்ரவரி* 19

மட்டை பந்து பார்ப்பேன்
மண்டை உடைக்க ஆறு வரும்
மருந்து போடா நாலு வரும்
சண்டை விலக்க மூன்று வரும்
சாட்சி சொல்ல இரண்டு வரும்
ஒன்று மட்டும் கூட வரும்
முட்டாள் என்று மு(மொ)ட்டை இடும்

* பிறமொழிச்சொல்


குறிப்பு : இக்கவிதை பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் என் தோழர்களுக்கு


புதன், 2 பிப்ரவரி, 2011

காதல் கடன்


காதல் அழியாதது
கடனும் அழியாதது
செலவுக்கு தரும் நண்பன்
சிநேகிதமாய் சொன்னது

விவசாயியின் காதலி


நன்செய்யிலே பாத்தி கட்ட
புன்செய்யிலே மண்ணெடுக்க
பெண்செய்யும் காதலிலே
ஆண்செய்யும் ஆசையென்ன ?

காதல் தலையா பூவா


மோரும் புளித்து போக
நீரும் இனித்து போக
கைபடத்தான் அவள் வேண்டும்
காசை சுண்டினால் பூவிழுமா ?

இதய சிறையில் எனது தற்கொலை


கைது செய்தாள் கண்களால்
கட்டி இழுத்து போனால் உள்ளத்தால்
சிலகாலம் சிறையில் அடைத்தால் இதயத்தில்
செத்து போனேனே தூக்கினில்

வாலிப பரிசு


ஓடினால் காதல் பரிசு
தேடினால் கல்யாண பரிசு

கைபேசியின் அழைப்பொலியிலே


கோவில் மணியாய் உன்னுள்ளே
கும்பிடும் பக்தியாய் தாயுள்ளே
நல்ல சகுனமாய் தெரிந்ததாம்  பெண்பார்க்க
நான் மட்டும் அறிவேன் அவள் அழைப்பை