செவ்வாய், 28 டிசம்பர், 2010

கடலை விற்று கப்பல் வாங்கி

கச்சா எண்ணெய் கப்பல் பல
காத்திருகிறதாம் நடுகடலில்

நங்கூரம் இட்டபடி
நடுவண் அரசை எதிர்நோக்கி

விரைந்து வருவதற்கு
விலையேற்று விதி
ஆழிபேரலை அழிப்பதர்க்குள்ளே

எண்ணெய் கசிவில் இறந்துபோன
இன்று மிதங்கிய மீனோ சொன்னால்

கருவாடு ஆக்கி நான் அந்த மீனை
காசாக்கிட திட்டம் வகுத்தேன்

எரிபொருள் விலை ஏறும்போது
இந்த காசை நான் செலவழிப்பேன்

திங்கள், 27 டிசம்பர், 2010

வெயிலின் தரிசனம்

வெங்காய விலையை பார்பதற்க்காகதான்
விரைந்து செல்கிறதாம் வெயில்  உச்சிக்கு

சூடு உச்சி மண்டையில் உரைத்தாலும் வெயிலாய்
சும்மா போட மாட்டேன் ஓட்டு, வேறென்ன
காசு வாங்கி கடமையை கச்சிதமாய் செய்திடுவேன்
நீங்கள் ?

வியாழன், 16 டிசம்பர், 2010

பித்தன் என்னை மன்னியுங்கள் !

கச்சா எண்ணெய் விலையேற்றம்
காரணத்தை கூறுகின்றான் திரும்ப திருமப்
நிதி அமைச்சன் சாதூர்யமாய் என்னை
நினைத்து விட்டன முட்டாள் என்று
மூன்று ரூபாய் விலை ஏற்றி
மூழ்கும் என் எண்ணம் எரிபொருளில்
இருபத்தி மூன்று நாள் அலுவலில்
இழந்து விட்ட நூற்று நாற்பது கோடியும்
தொலைதொடர்பு ஊழல் என்று இனி
தொட முடியா உயரத்தில் உலகில்
அமைச்சனின் குப்பை கொடியில்
அழிந்து மக்குதாம் கருவூலவடிகள்
கொஞ்சமல்ல 1 .73 கோடி இலட்சம்
குறுக்கில் வந்ததால் உச்ச நீதி மன்றம்
தெரிந்து கொண்டாலும் நான் என்ன செய்ய
திமிராய் இருக்குது ஆட்சி அதிகாரம்
தினமும் கிளம்புது புது புது ஊழல்
தீரா நோயாய் ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும்
கவலைகள்  தீர்வதற்கு கற்பனைகள் செய்தால்
கள்ள பணம் சுவிஸ் வங்கியில் வாங்கி
காத்திருந்தாலும் வராது இனிமேல்
கண்ணீரோடு காலமெல்லாம் பாடுபட்டாலும்
ஏறிவிட்ட எரி பொருள் விலைக்கு
எதிர்கட்சிகள் கலகம் செய்தாலும்
மானம் கெட்ட அனைத்து கட்சிகளும்
மறு தேர்தலில் வெற்றி பெற
காசு கொடுத்துதான் ஓட்டை வாங்கும்
காத்திருக்கிறேன் அந்த பணத்திற்கு
சேர்த்து வைத்த கடனையெல்லாம் எரி பொருளுக்காய்
செலவழித்தேன் சீக்கிரம் வா தேர்தலே சிக்கனமாய்

வியாழன், 2 டிசம்பர், 2010

தாய் இந்நாட்டில் , தவிர்த்தேன் வெளி நாட்டில்

வெளிநாட்டுக்கு சென்று நான்
வீட்டிலிருந்து கொண்டுவந்த ,

நாரத்தன் காய் ஊறுகாயை
நாடுகடந்தும் தொட்டுக்கொண்டேன் .

சுவையாக இருந்தது
சொட்டும் எச்சில் சொன்னது !

அம்மாவின் கைபதம்
அற்புதம்தான் என்றேன்,

இணையவழி உரையாடலில்
என் அம்மாவோடு ,

அவள்
ஊறுகாயை ஊறவைத்து
உப்பில்லை என்றாள் நேற்று .

நான்
வேறு என்னதான்
வினவினேன் இன்று .

கண்ணீரில் ஊறவைத்தால்
அன்பு ஊறுகாய் கசக்காது என்று

அவள் செந்நீர் சேர்த்து
செய்தாளாம் ............................!

திங்கள், 29 நவம்பர், 2010

மரணம்

இலவசம் என்றாலும்
யாரும் வரவில்லை ஏழைகளே !
கொல்லி காசை இங்கேயே
கொட்டி விட்டு போங்கள்
எடுக்க  வரும் போது
எடுத்துகொள்வேன்
அரசியல் தலைவனோடு
உங்கள் உயிரையும் !

ஆண்டவனுக்கு என் உயிர் காணிக்கை ?

இறையாண்மை போர்வையாக்கி
என்னுடைய மானம் காத்தால்
குறை கூறி குமைகிறது
கொடுமை  என்று  அவிழ்கிறது

எழுதும்போது அரசியல் சாசனத்தில்
இதற்கான விளக்கத்தை நெய்யவில்லை
இனம் குணம் வண்ணமெல்லாம்
எங்களுக்கு பூசவில்லை இந்தியாவில்

ஆனாலும் அதை நான் கேட்கவில்லை
ஆணவ அரசியில் அடிமை நான்
ஆண்டவனே உன்னிடம் தான்
அழுது கொண்டு கேட்கின்றேன்

பாரதியை பிறக்கவை அவன் ஒருமை
பாட்டாலே அசிங்கத்திற்கு   தீ வைப்பான்
பட்டு கோட்டை பிறக்கவை அவன் திரை
பாட்டாலே ஊழ்  சாம்பலையும் பறக்க வைப்பான்

நாமக்கலை பிறக்கவை கத்தியின்றி
நம் தமிழுக்காக யுத்தம் செய்வான்
நன்றியாக என் உயிரை எடுத்துகொள்
நாற்பதினாயிரம் உயிர்களோடு இன்னொன்று

ஈழமென்றும் இலங்கையென்றும்
இரு நாடுகளாய் பிறக்கவைத்தால்
வீழும் எங்கள் துரோகிகளின்
வெட்கம் கெட்ட தலைகள் எல்லாம்

பள்ளி காதலியும் ,கள்ள காதலியும்

பத்தாம் வகுப்பு காதல் நாங்கள்
பழகி கட்டிகொண்டோம்
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவில்
தினமும் திட்டி கொண்டோம்

இருபத்தி இரண்டாம் அகவையில்தானே
ஏமாற்றம் தெரிந்து கொண்டேன்
இரண்டாம் முறையும் காதலிக்கும்
இன்ப கள்ள காதல் தெரிந்து கொண்டேன்

கள்ள காதலி மடியில் தானே
 கவிதை எழுதுகின்றேன்
காவல் துறையின் சாட்சியில்தானே
முதல் காதலி கைவிடுகின்றேன்

நித்தம் சாகும் நீதி துறையும்
நேற்று பிழை (த்து ) நீதி செய்தால்
கள்ள காதலன் தலைவனாக
கருணை மனு தாக்கல் செய்வேன்

வழக்குகளில் வெற்றி பெற வாய்புண்டா
வாழ்க்கை கசந்து கேட்கின்றாள்
வாலிபத்தை என்னிடம் தொலைத்துவிட்ட
பள்ளி காதலி நீதியை தூற்றுகின்றாள்  

நவீன குடைகள் நாளைய மழைக்கு தேவையில்லை ?

நவீன குடைகளுக்கு
நாங்கள் எழுதும் கவிதை
கீற்று தான் கிறுக்குகிறது
கீழ்வானத்தில் கிண்டல் அடிக்கிறது

முன்பு நாங்கள் முடைந்து கொள்வோம்
முதுகில் நாங்கள் ஏறிகொள்வோம்
மாசத்தில் மூன்று நாட்கள் மனிதர்கள்
மாட்டிக்கொள்ளும் சட்டையாவோம்

குறைந்து வரும் ஆண்டுகளில்
கூறிகொள்வோம் இரண்டு திங்கள்
அடைமழை ஆடையென
ஆனதெல்லாம் மழைக்காலமென்று

மறந்துதான் போயிருக்கும் எங்கள்
மாற்று குடைகளை கண்டுதான்
வெயிலுக்கு மாட்டிக்கொள்ளும்
விளம்பரத்தில் இருந்தாலும்

காவேரியும் எதிர்த்து வரும்
கடல் நீர் நிரம்பியதால்
எந்த ஏரியும் வறண்டுவிடும்
இப்போது தான் தூர்வார்வதால்

காலம்தான் மாறியது
கடைசியில் தான் தெரியுது
புகை போகும் வானத்திலே
போவதெல்லாம் மேகமென்று

அழுவதுதான் தூரலாகும்
அதற்குகூட மாநகரமெங்கும்
மேம்பாலம் பெயர்ந்து விழும்
சுரங்கபாதை சூழ்ந்து கொள்ளும்

தார்சாலை தவிடாகும் மழை
தண்ணீர்தான் அதை சே (சோ )றாக்கும்
வெள்ள நிவாரணம் வாங்குவதற்கு
விழுந்தான் மூச்சை விடுவர்

இதை கண்டு நான் அழுது
இருந்து விட்டேன் ஒற்றை மரத்தில்
தலை குருத்தை வெட்டி தான் தன்
தாயை அதில் கிடத்தி

பச்சை மட்டை பாடையில்தான்
படுக்க வைத்து தாங்குகின்றேன் நீ
பார்த்திருக்க நான் படித்தேன்
பாவம்தான் நீ கூட

சுடுகாடு செல்லும் வரையில்
சொல்லி வருவேன் என் சோகங்களை
சொர்கத்திற்கு மூச்சு விடும் மக்கள்
சொந்தங்களும் இதை உணருமோ ?

மழை மெல்ல குறைந்து போகும்
மக்கள் உன்னை ஒதுக்கி வைப்பர்
மரங்கள் எந்தாய் குறைவது போலே
மரணங்கள் அடுக்காய் நிகழ்வதாலே

உங்கள் பயனும் மாறிபோகும்
எங்கள் பயணம் போல் கூறிபோகும்
உன் கை ஒடித்து ஒதுக்கி வைப்பர்
உன் துணியெடுத்து கொடி பிடிப்பர்

நவீன குடைகள் நீங்கள் இனிமேல்
நாளைய மழைக்கு தேவையில்லை
வெயிலுக்காவது தேவை என்றால்
வெந்து நீயோ எரிந்து போவாய்

அடிடா மச்சான் அடிடா ?

அலுவலகம் ஒன்று  திறந்து  வைத்தேன்
அடியாள் தேவை விளம்பரத்தில் சொல்லிவைத்தேன்
முன்னதாக காவல்துறைக்கும்
 மூத்த நீதி துறைக்கும்
அழைப்பிதழ் அனுப்பி வைத்து
ஆட்சி அதிகாரத்தில் திறக்க வைத்தேன்

தென் தமிழக திசையிலிருந்து தேடல் கொண்டவனும்
தெரியாமல் சிறையிலிருந்து நேற்று வந்தவனும்
வடபுல கொலைகளில் பல
வழக்கில் சிக்கிகொண்டவனும் வந்தார்கள்

மேலை நாட்டு  துப்பாக்கி மேற்கில் பதுக்கி வைத்தவனும்
கீழை கொள்ளை பலதை செய்து கீர்த்தி பெற்றவனும்
முன் அனுபவன் பெற்றவன் என்று முதலில் வந்தான்

பின் அனுபவம் பெறுவதற்காக பிறகு வந்தவனெல்லாம் இது
பிழைத்து கொள்ளும் வழியென்று தெரிந்து கொண்டானாம்
உற்று நான் கவனித்து உட்காரவைத்தேன்
உரையாடும் சாக்கில் இதை தெரிந்து கொண்டேன்

வழக்கறிஞர் தொழில் படித்த வாலிபன் கண்டேன்
வாழ்க்கை தொழிற்கல்வியின் சில தோளை கண்டேன்
இறுதி காவல் தேர்வில் எழுதிய இளைஞன் என்றோர்
எல்லோரும் முடிவில் தோல்வி கண்டவராம்

கலை கல்லூரி மாணவனும் வந்து கலந்து கொண்டனர்
காசுக்காக பாதி நாளில் வந்து செல்வேன் என்றனர்
பொறியியல் கல்லூரி கட்டமைப்பில் உளுத்துபோன போய்விட்ட பாக்கி தாளுக்காக பணம் திரட்ட
வந்து நின்ற இளைஞன் கையில் கொரிய கைபேசி
வாலறுந்த நாயை போன்று கத்துகின்றது

என்  நிறுவன வேலையைத்தான் கூறுகின்றேன்
எப்படித்தான் பணி இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்
பொறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு
புதிய தொழிலாய் செய்பவர்களை
கண்டு நீங்கள் கழுத்தருத்தால் உம்மை
காவல் துறையின் தலைமை பதவிக்கு உட்காரவைப்பேன்

நடை பாதை வியாபாரியிடம் நாயாய்
நடந்து கொள்ளும் மாமூலுக்கு
தருகின்ற காசை நீங்கள் தட்டி பறித்து எட்டி உதைத்து
தர்மத்தை நிலை நாட்ட அந்த கூட்டத்தை
ஒழித்து விட்டு வந்து விட்டால் உங்களுக்கு
சுங்கதிலே வேலையுண்டு சொல்லிவிட்டேன் செய்வீரோ

அரசியல் தலைவனுக்கு அரிவாள் செய்யும்
அர்ச்சனை செய்யும் பூசாரியையும்
தொண்டர் கூட்டம் தோளைவெட்டி
தொலைத்து விட்டு வந்திடுங்கள்
தண்டனைகள் வராமல் தான்
தலைமை நீதிபதி பணியினை உங்களுக்கு தந்திடுவேன்

மணல் கொள்ளை மந்திரியையும்
மாநகர பேருந்தில் ஏற்றி
விலைவாசி வேகம் போலே
வெடுகென்று கொன்றிடுங்கள்

வேலையில்லா இளைஞரெல்லாம்
சேலையில்லா பெண்ணை காணும்
தொலை காட்சி அலைவரிசையையும்
துரத்தி நிற்கும் இணையதளத்தையும்
எரித்து விட்டு வந்திடுங்கள்
என்னருமை அடியாட்களே

எதிர்க்கட்சி ஊழலெல்லாம்
எங்களது ஊழல் போலே
கொஞ்சம் கூட குறைச்சலில்லை
கூட்டணியில் பங்கு போடும்
குழப்பத்தையும் கண்டு நீங்கள்

சாக்கடையில் இட்டு நீங்கள்
சரித்திரத்தில் புதைத்து விட்டு
வந்திடுங்கள் வழக்கில்லை
வாழக்கையுண்டு சிறையிலில்லை

ஒன்றுக்கு வருவதென்று
ஒருவன் சென்று விட்டான்
தண்ணீர் தாகமெடுக்குது இன்னொருவன்
தலை குனிந்து சென்று விட்டான்

வயிற்றை கலக்குதென்று பலர்
வாசல் படிக்கு தாவி சென்றார்
ஒற்றை ரூபாய் தொலை பேசியில்
உத்தரவு கேட்டு விட்டு வந்திடுவேன் என்று
சொன்னோர் இன்னும் பலர்
சொல்லி விட்டு சென்று விட்டார்

எஞ்சியது எழுத்து மட்டும்
எப்படி நான் என் அலுவலகத்திற்கு
மாத வாடகை தந்திடுவேன்
மனதிற்குள் கவலை கொண்டேன்

பள்ளி கூடம் திறந்தொரு
பாடத்தில் மேல் உள்ளவை சொல்லித்தந்தால்
சிறப்பு கட்டணம் சேர்த்தொரு பெரும்
செல்வந்தனாய் மாறி போவேன்
எண்ணம் நான் கொண்டு விட்டேன்
எழுதிவிட்டேன் தமிழக தலைவிதியை

பாரதி உன் கவிதை பால்

பாரதி பழகி கொண்டிருக்கிறேன் யுத்தம்
பழக பழக புளிக்காதென்ற
தமிழனின் வெற்றிக்காக அப் 'பால்'  

மாவீரர் செய்தி

வெட்கம் கெட்ட பூமி கனியில்
விழுந்து தொலைத்து விட்டேன்
துக்கம் கொண்டு என்னுடல்
தூய்மையாக அழுகி போய்விட்டேன்
செரிக்க வந்த புழுக்கள் கூட
சிங்களம் சிரிச்சு நொந்ததடி
சேதி தெரியுமா சின்ன கிளியே
மீண்டும் சீக்கிரம் பிறப்பேன்டி
மீண்டு ஈழ விடுதலை கொடுப்பேன்டி  

ஆபாச சுவரொட்டி

ஆபாச முத்தத்தில் கொஞ்சமாய் கலந்து
அரைகுறை ஆடையுடன் கொஞ்சமாய் களைந்து
தினமாக களித்ததால் தினுசாய் வலித்ததாம்
தீராத நோயென்றே எயிட்சும் வந்ததாம்
என் வீட்டு சுவர்கள் என்னை
இடித்துதான் சொல்லியது
எவர்க்கும் அறிவில்லை என்ன நான் செய்வது

உடல் ஈகை வள்ளல்

பல்லவன் சிலை கண்கள் கூட  உன்னை
பார்க்க துடிக்குதடா !
நல்லவன் சிலை உன்னை காண அது
நடந்து வந்ததடா !
சாக்கடை தலைவன் அரசியல் சிலைக்கு உன்னை
சகிக்க முடியலைடா!
காகம் தலையில் கழிந்தால் கூட அதற்கு
கண்ணை மூட தெரியலைடா!
இமய மலையும் பாறை பெயர்த்து உன்னை
ஏற்றி சிலையில் வைக்குமாடா !
எட்டப்பன் சிலைகள் இருந்தா உனக்கு
ஏளனம் செய்யுமாடா !
காவல் சிலைகள் கையை மூடி நிர்வாண
குற்றம் மறைகும்டா !
சட்ட சிலைகள் கையை கொடுத்து உன்
சாவின் நீதி அழிக்குமடா !
முத்துக்குமார் சிலைகள் என்றால் தமிழ் சங்கம்
முழங்கி எட்டு திக்கும் ஒலிக்குமடா !
சிங்களங்கள் சிலையாய் மாறி சித்தம் கலங்குதடா உன்
சிறப்பை நொந்து தீயை மூட்டி அது ,
சீக்கிரம் செத்து அழியுமடா !
ஈழம் சீக்கிரம் எழுமடா, உடல் ஈகை வள்ளலடா உன்
சிலை போரை முடிக்குமடா !

கவிஞனின் கேள்விகள்

எங்கள் மரணத்திற்கு பின்னால்
உங்கள் மரண சான்றிதழிலாவது
மாற்றி திருத்தி கொள்ளுங்கள்
மானமுள்ள தமிழனென்று
ஈழத்து கவிஞன் எனக்காக
எழுதிய இறுதி கவிதையிது