செவ்வாய், 28 டிசம்பர், 2010

கடலை விற்று கப்பல் வாங்கி

கச்சா எண்ணெய் கப்பல் பல
காத்திருகிறதாம் நடுகடலில்

நங்கூரம் இட்டபடி
நடுவண் அரசை எதிர்நோக்கி

விரைந்து வருவதற்கு
விலையேற்று விதி
ஆழிபேரலை அழிப்பதர்க்குள்ளே

எண்ணெய் கசிவில் இறந்துபோன
இன்று மிதங்கிய மீனோ சொன்னால்

கருவாடு ஆக்கி நான் அந்த மீனை
காசாக்கிட திட்டம் வகுத்தேன்

எரிபொருள் விலை ஏறும்போது
இந்த காசை நான் செலவழிப்பேன்

திங்கள், 27 டிசம்பர், 2010

வெயிலின் தரிசனம்

வெங்காய விலையை பார்பதற்க்காகதான்
விரைந்து செல்கிறதாம் வெயில்  உச்சிக்கு

சூடு உச்சி மண்டையில் உரைத்தாலும் வெயிலாய்
சும்மா போட மாட்டேன் ஓட்டு, வேறென்ன
காசு வாங்கி கடமையை கச்சிதமாய் செய்திடுவேன்
நீங்கள் ?

வியாழன், 16 டிசம்பர், 2010

பித்தன் என்னை மன்னியுங்கள் !

கச்சா எண்ணெய் விலையேற்றம்
காரணத்தை கூறுகின்றான் திரும்ப திருமப்
நிதி அமைச்சன் சாதூர்யமாய் என்னை
நினைத்து விட்டன முட்டாள் என்று
மூன்று ரூபாய் விலை ஏற்றி
மூழ்கும் என் எண்ணம் எரிபொருளில்
இருபத்தி மூன்று நாள் அலுவலில்
இழந்து விட்ட நூற்று நாற்பது கோடியும்
தொலைதொடர்பு ஊழல் என்று இனி
தொட முடியா உயரத்தில் உலகில்
அமைச்சனின் குப்பை கொடியில்
அழிந்து மக்குதாம் கருவூலவடிகள்
கொஞ்சமல்ல 1 .73 கோடி இலட்சம்
குறுக்கில் வந்ததால் உச்ச நீதி மன்றம்
தெரிந்து கொண்டாலும் நான் என்ன செய்ய
திமிராய் இருக்குது ஆட்சி அதிகாரம்
தினமும் கிளம்புது புது புது ஊழல்
தீரா நோயாய் ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும்
கவலைகள்  தீர்வதற்கு கற்பனைகள் செய்தால்
கள்ள பணம் சுவிஸ் வங்கியில் வாங்கி
காத்திருந்தாலும் வராது இனிமேல்
கண்ணீரோடு காலமெல்லாம் பாடுபட்டாலும்
ஏறிவிட்ட எரி பொருள் விலைக்கு
எதிர்கட்சிகள் கலகம் செய்தாலும்
மானம் கெட்ட அனைத்து கட்சிகளும்
மறு தேர்தலில் வெற்றி பெற
காசு கொடுத்துதான் ஓட்டை வாங்கும்
காத்திருக்கிறேன் அந்த பணத்திற்கு
சேர்த்து வைத்த கடனையெல்லாம் எரி பொருளுக்காய்
செலவழித்தேன் சீக்கிரம் வா தேர்தலே சிக்கனமாய்

வியாழன், 2 டிசம்பர், 2010

தாய் இந்நாட்டில் , தவிர்த்தேன் வெளி நாட்டில்

வெளிநாட்டுக்கு சென்று நான்
வீட்டிலிருந்து கொண்டுவந்த ,

நாரத்தன் காய் ஊறுகாயை
நாடுகடந்தும் தொட்டுக்கொண்டேன் .

சுவையாக இருந்தது
சொட்டும் எச்சில் சொன்னது !

அம்மாவின் கைபதம்
அற்புதம்தான் என்றேன்,

இணையவழி உரையாடலில்
என் அம்மாவோடு ,

அவள்
ஊறுகாயை ஊறவைத்து
உப்பில்லை என்றாள் நேற்று .

நான்
வேறு என்னதான்
வினவினேன் இன்று .

கண்ணீரில் ஊறவைத்தால்
அன்பு ஊறுகாய் கசக்காது என்று

அவள் செந்நீர் சேர்த்து
செய்தாளாம் ............................!