திங்கள், 29 நவம்பர், 2010

ஆண்டவனுக்கு என் உயிர் காணிக்கை ?

இறையாண்மை போர்வையாக்கி
என்னுடைய மானம் காத்தால்
குறை கூறி குமைகிறது
கொடுமை  என்று  அவிழ்கிறது

எழுதும்போது அரசியல் சாசனத்தில்
இதற்கான விளக்கத்தை நெய்யவில்லை
இனம் குணம் வண்ணமெல்லாம்
எங்களுக்கு பூசவில்லை இந்தியாவில்

ஆனாலும் அதை நான் கேட்கவில்லை
ஆணவ அரசியில் அடிமை நான்
ஆண்டவனே உன்னிடம் தான்
அழுது கொண்டு கேட்கின்றேன்

பாரதியை பிறக்கவை அவன் ஒருமை
பாட்டாலே அசிங்கத்திற்கு   தீ வைப்பான்
பட்டு கோட்டை பிறக்கவை அவன் திரை
பாட்டாலே ஊழ்  சாம்பலையும் பறக்க வைப்பான்

நாமக்கலை பிறக்கவை கத்தியின்றி
நம் தமிழுக்காக யுத்தம் செய்வான்
நன்றியாக என் உயிரை எடுத்துகொள்
நாற்பதினாயிரம் உயிர்களோடு இன்னொன்று

ஈழமென்றும் இலங்கையென்றும்
இரு நாடுகளாய் பிறக்கவைத்தால்
வீழும் எங்கள் துரோகிகளின்
வெட்கம் கெட்ட தலைகள் எல்லாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக