திங்கள், 29 நவம்பர், 2010

நவீன குடைகள் நாளைய மழைக்கு தேவையில்லை ?

நவீன குடைகளுக்கு
நாங்கள் எழுதும் கவிதை
கீற்று தான் கிறுக்குகிறது
கீழ்வானத்தில் கிண்டல் அடிக்கிறது

முன்பு நாங்கள் முடைந்து கொள்வோம்
முதுகில் நாங்கள் ஏறிகொள்வோம்
மாசத்தில் மூன்று நாட்கள் மனிதர்கள்
மாட்டிக்கொள்ளும் சட்டையாவோம்

குறைந்து வரும் ஆண்டுகளில்
கூறிகொள்வோம் இரண்டு திங்கள்
அடைமழை ஆடையென
ஆனதெல்லாம் மழைக்காலமென்று

மறந்துதான் போயிருக்கும் எங்கள்
மாற்று குடைகளை கண்டுதான்
வெயிலுக்கு மாட்டிக்கொள்ளும்
விளம்பரத்தில் இருந்தாலும்

காவேரியும் எதிர்த்து வரும்
கடல் நீர் நிரம்பியதால்
எந்த ஏரியும் வறண்டுவிடும்
இப்போது தான் தூர்வார்வதால்

காலம்தான் மாறியது
கடைசியில் தான் தெரியுது
புகை போகும் வானத்திலே
போவதெல்லாம் மேகமென்று

அழுவதுதான் தூரலாகும்
அதற்குகூட மாநகரமெங்கும்
மேம்பாலம் பெயர்ந்து விழும்
சுரங்கபாதை சூழ்ந்து கொள்ளும்

தார்சாலை தவிடாகும் மழை
தண்ணீர்தான் அதை சே (சோ )றாக்கும்
வெள்ள நிவாரணம் வாங்குவதற்கு
விழுந்தான் மூச்சை விடுவர்

இதை கண்டு நான் அழுது
இருந்து விட்டேன் ஒற்றை மரத்தில்
தலை குருத்தை வெட்டி தான் தன்
தாயை அதில் கிடத்தி

பச்சை மட்டை பாடையில்தான்
படுக்க வைத்து தாங்குகின்றேன் நீ
பார்த்திருக்க நான் படித்தேன்
பாவம்தான் நீ கூட

சுடுகாடு செல்லும் வரையில்
சொல்லி வருவேன் என் சோகங்களை
சொர்கத்திற்கு மூச்சு விடும் மக்கள்
சொந்தங்களும் இதை உணருமோ ?

மழை மெல்ல குறைந்து போகும்
மக்கள் உன்னை ஒதுக்கி வைப்பர்
மரங்கள் எந்தாய் குறைவது போலே
மரணங்கள் அடுக்காய் நிகழ்வதாலே

உங்கள் பயனும் மாறிபோகும்
எங்கள் பயணம் போல் கூறிபோகும்
உன் கை ஒடித்து ஒதுக்கி வைப்பர்
உன் துணியெடுத்து கொடி பிடிப்பர்

நவீன குடைகள் நீங்கள் இனிமேல்
நாளைய மழைக்கு தேவையில்லை
வெயிலுக்காவது தேவை என்றால்
வெந்து நீயோ எரிந்து போவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக