திங்கள், 29 நவம்பர், 2010

அடிடா மச்சான் அடிடா ?

அலுவலகம் ஒன்று  திறந்து  வைத்தேன்
அடியாள் தேவை விளம்பரத்தில் சொல்லிவைத்தேன்
முன்னதாக காவல்துறைக்கும்
 மூத்த நீதி துறைக்கும்
அழைப்பிதழ் அனுப்பி வைத்து
ஆட்சி அதிகாரத்தில் திறக்க வைத்தேன்

தென் தமிழக திசையிலிருந்து தேடல் கொண்டவனும்
தெரியாமல் சிறையிலிருந்து நேற்று வந்தவனும்
வடபுல கொலைகளில் பல
வழக்கில் சிக்கிகொண்டவனும் வந்தார்கள்

மேலை நாட்டு  துப்பாக்கி மேற்கில் பதுக்கி வைத்தவனும்
கீழை கொள்ளை பலதை செய்து கீர்த்தி பெற்றவனும்
முன் அனுபவன் பெற்றவன் என்று முதலில் வந்தான்

பின் அனுபவம் பெறுவதற்காக பிறகு வந்தவனெல்லாம் இது
பிழைத்து கொள்ளும் வழியென்று தெரிந்து கொண்டானாம்
உற்று நான் கவனித்து உட்காரவைத்தேன்
உரையாடும் சாக்கில் இதை தெரிந்து கொண்டேன்

வழக்கறிஞர் தொழில் படித்த வாலிபன் கண்டேன்
வாழ்க்கை தொழிற்கல்வியின் சில தோளை கண்டேன்
இறுதி காவல் தேர்வில் எழுதிய இளைஞன் என்றோர்
எல்லோரும் முடிவில் தோல்வி கண்டவராம்

கலை கல்லூரி மாணவனும் வந்து கலந்து கொண்டனர்
காசுக்காக பாதி நாளில் வந்து செல்வேன் என்றனர்
பொறியியல் கல்லூரி கட்டமைப்பில் உளுத்துபோன போய்விட்ட பாக்கி தாளுக்காக பணம் திரட்ட
வந்து நின்ற இளைஞன் கையில் கொரிய கைபேசி
வாலறுந்த நாயை போன்று கத்துகின்றது

என்  நிறுவன வேலையைத்தான் கூறுகின்றேன்
எப்படித்தான் பணி இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்
பொறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு
புதிய தொழிலாய் செய்பவர்களை
கண்டு நீங்கள் கழுத்தருத்தால் உம்மை
காவல் துறையின் தலைமை பதவிக்கு உட்காரவைப்பேன்

நடை பாதை வியாபாரியிடம் நாயாய்
நடந்து கொள்ளும் மாமூலுக்கு
தருகின்ற காசை நீங்கள் தட்டி பறித்து எட்டி உதைத்து
தர்மத்தை நிலை நாட்ட அந்த கூட்டத்தை
ஒழித்து விட்டு வந்து விட்டால் உங்களுக்கு
சுங்கதிலே வேலையுண்டு சொல்லிவிட்டேன் செய்வீரோ

அரசியல் தலைவனுக்கு அரிவாள் செய்யும்
அர்ச்சனை செய்யும் பூசாரியையும்
தொண்டர் கூட்டம் தோளைவெட்டி
தொலைத்து விட்டு வந்திடுங்கள்
தண்டனைகள் வராமல் தான்
தலைமை நீதிபதி பணியினை உங்களுக்கு தந்திடுவேன்

மணல் கொள்ளை மந்திரியையும்
மாநகர பேருந்தில் ஏற்றி
விலைவாசி வேகம் போலே
வெடுகென்று கொன்றிடுங்கள்

வேலையில்லா இளைஞரெல்லாம்
சேலையில்லா பெண்ணை காணும்
தொலை காட்சி அலைவரிசையையும்
துரத்தி நிற்கும் இணையதளத்தையும்
எரித்து விட்டு வந்திடுங்கள்
என்னருமை அடியாட்களே

எதிர்க்கட்சி ஊழலெல்லாம்
எங்களது ஊழல் போலே
கொஞ்சம் கூட குறைச்சலில்லை
கூட்டணியில் பங்கு போடும்
குழப்பத்தையும் கண்டு நீங்கள்

சாக்கடையில் இட்டு நீங்கள்
சரித்திரத்தில் புதைத்து விட்டு
வந்திடுங்கள் வழக்கில்லை
வாழக்கையுண்டு சிறையிலில்லை

ஒன்றுக்கு வருவதென்று
ஒருவன் சென்று விட்டான்
தண்ணீர் தாகமெடுக்குது இன்னொருவன்
தலை குனிந்து சென்று விட்டான்

வயிற்றை கலக்குதென்று பலர்
வாசல் படிக்கு தாவி சென்றார்
ஒற்றை ரூபாய் தொலை பேசியில்
உத்தரவு கேட்டு விட்டு வந்திடுவேன் என்று
சொன்னோர் இன்னும் பலர்
சொல்லி விட்டு சென்று விட்டார்

எஞ்சியது எழுத்து மட்டும்
எப்படி நான் என் அலுவலகத்திற்கு
மாத வாடகை தந்திடுவேன்
மனதிற்குள் கவலை கொண்டேன்

பள்ளி கூடம் திறந்தொரு
பாடத்தில் மேல் உள்ளவை சொல்லித்தந்தால்
சிறப்பு கட்டணம் சேர்த்தொரு பெரும்
செல்வந்தனாய் மாறி போவேன்
எண்ணம் நான் கொண்டு விட்டேன்
எழுதிவிட்டேன் தமிழக தலைவிதியை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக